சூடானில் 72 மணித்தியால போர் நிறுத்தம்

170 0

சூடானில் போரில் ஈடுபட்டுள்ள படைகள் 72 மணித்தியாலங்கள் போர் நிறுத்தம் செய்வதற்கு  இணங்கியுள்ளன.

சூடான் ஆயுதப் படைகளுக்கும் (எஸ்.ஏ.எவ்), ஆர்எஸ்எவ் எனும் துணை இராணுவப் படையினருக்கும் இடையில் கடந்த 15 ஆம் திகதி முதல் கடும் மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

10 நாட்கள் நடைபெற்ற இம்மோதல்களில்  400 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

சூடானில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருந்தன. இந்நிலையில், அமெரிக்காவின் உதவியுடன் 3 போர் நிறுத்தத்துக்கு இருதரப்பினரும் இணங்கியுள்ளனர்.

திங்கள் 24 நள்ளிரவு  முதல் இப்போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதாக அமெரிக்க இராங்கச் செயலாளர் அன்lனி பிளின்கன் அறிவித்துள்ளார்,