உலகளாவிய பௌத்த உச்சி மாநாடு பௌத்தத்தின் சாரத்தை உலகிற்கு பரப்ப உதவும் என்று திபெத்திய ஆசிரியரும் திபெத்திய பௌத்தத்தின் தியான குருவுமான யோங்கே மிங்யுர் ரின்போச் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெறும் உலக பௌத்த உச்சி மாநாட்டின் இரண்டாவது நாள் கூட்டத்தில் கலந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் நாங்கள் வித்தியாசமான பாரம்பரியத்தை கொண்டுள்ளோம். புத்த தர்மம் இந்தியாவில் இருந்து பிறந்தது. எனவே நாங்கள் நிறைய கற்றுக்கொள்கிறோம்.
இந்தியாவும் நேபாளமும் பௌத்தத்தைப் பொறுத்த வரை மிக நெருக்கமான உறவைக் கொண்டுள்ளன. ஏனெனில் அவை அண்டை நாடுகள். ஆனால் பௌத்தம் இரு நாடுகளையும் இணைக்கிறது. புத்த தர்மம் திபெத்திற்கு வந்தது. இந்தியாவை நாம் தந்தை போலவும், நேபாளத்தை தாய் போன்றும் கருதுகிறோம். நாங்கள் இந்தியாவிலிருந்து, நேபாளத்திலிருந்து நிறைய போதனைகளைப் பெறுகிறோம் எனவும் கூறினார்.

