பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக கைகோர்த்த எதிர்க்கட்சிகள்

168 0

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிரான பொது இணக்கப்பாட்டுகள் சிறந்த கொள்கைகளை வகுக்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.

பொது கொள்கை வகுப்பு பணிகளை தொடர்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன்  பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர்  பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி  மற்றும் அரசியல் கட்சி ஒற்றுமையின் அழைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக  சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு அணியாக செயற்படுவதற்கு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக பொது வேலைத்திட்டமொன்றை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர்  நேற்று  திங்கட்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஒன்று கூடி விசேட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

இந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கியுள்ளார்.சர்வதேசத்தை பகைத்துக் கொண்டு நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய  முடியாது. சர்வதேசத்துடன் தொடர்பு கொண்டு  பொது நிகழ்ச்சி  நிரலுக்கு அமைய சிறந்த வெற்றியை அடைய    ஒன்றிணைய  வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட பல சட்டமூலங்கள் இந்த நாட்டின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் எனவே எதிர்க்கட்சிகள் அவற்றிற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்,ஆகியவற்றுக்குப் பதிலாக மாற்று வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்?ரவூப் ஹக்கீம்,மனோ கணேசன், லக்ஷ்மன் கிரியெல்ல, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், சந்திம வீரக்கொடி, நாலக கொடஹேவா,உதய கம்மன்பில, வீரசிங்க, வீரசுமன வீரசிங்க, கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,தயாசிறி ஜயசேகர, கெவிது குமாரதுங்க ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் சட்ட தேசிய, சமூக மற்றும் சர்வதேசம் என நான்கு வழிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் பயங்கரவாத  எதிர்ப்பு தடைச்சட்டமூலம்  தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.சட்டமூலத்தை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவோம் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் சர்வதேச ரீதியாக பாரிய ஆபத்து ஏற்படலாம் எனவும் பொருளாதார பாதிப்பு மத்தியில் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என  பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலம்  சட்டமா அதிபர் திணைக்களத்தை விட தனியார் சட்டத்தரணிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.ஜனநாயகத்தை முழுமையாக குழி தோண்டி புதைக்கும் ஏற்பாடுகள் சட்டமூலத்தில் உள்ளாவாங்கப்பட்டுள்ளது என  பாராளுமன்ற உறுப்பினர் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பயங்கரவாத தடைச் சட்டத்தை வைத்து அல்ல ,நடைமுiறையல் உள்ள சட்டம் மற்றும் புதிய சட்டமூலம் ஆகியவற்றை இல்லாதொழித்து அபிவிருத்தியடைந்த நாடுகளில் அமுல்படுத்தப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென பாராளுமன்ற  உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்தை முழுமையாக மீள பெற  அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார். இந்தச் சட்டமூலத்திற்கு அனைவரும் எதிரானவர்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.அதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் என உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான பொது உடன்படிக்கை பணிகளை தொடர்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன்  பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர்  பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி  மற்றும் அரசியல் கட்சி ஒற்றுமையின் அழைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட அரசாங்கம் கொண்டு வரவுள்ள ஜனநாயக விரோதச் சட்டமூலங்கள் குறித்து ஊடகங்களுக்குப் பரவலாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டு இம்தியாஸ் பாக்கீர் மார்க்கருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.