பொரளை மயானத்திற்கு அருகில் காரினுள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட தினேஷ் ஷாப்டரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளையும் முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் டிஎன்ஏ மாதிரிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய நேற்று (24) அனுமதி வழங்கியுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கவனத்தில் கொண்டு மேலதிக நீதவான் மேற்கண்டவாறு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், பொரளை மயானத்தின் கண்காணிப்பாளர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட நால்வரிடமிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ மாதிரிகளும் ஷாஃப்டர் உயிரிழந்த நிலையில் அவ்விடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட டி.என்.ஏ மாதிரிகளும் சோதனைகளின்படி பொருந்தவில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

