மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வல வீதிப் பகுதியில் வைத்து நபரொருவரை கத்தியால் குத்திக் கொன்று தப்பிச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மிரிஹான குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் மத்தேகொட வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை ஆராச்சிகே வாசன விபுல பெரேரா 54 வயதுடைய கல்வல வீதி, மிரிஹான பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
மிரிஹான கல்வல வீதி பகுதியில் நேற்று (23) அதிகாலை நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

