நோன்புப் பெருநாளை முன்னிட்டு புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தலைமையில் புத்தளம் மாவட்ட செயலகத்துடன் இணைந்து பல்வேறு வகையான போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணங்களினால் 4 வருடங்களுக்குப் பிறகு குறித்த போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த போட்டி நிகழ்வுகள் புத்தளம் இஜித்துமா மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்றதுடன் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் போட்டி நிகழ்வைக் கண்டுகழிப்பதற்கு வருகை தந்திருந்தனர்.
மோட்டார் சைக்கிள் போட்டிகள், மாட்டு வண்டி பந்தையப் போட்டிகள் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எமெஸ்.பி ஹேரத் கலந்து கொண்டதுடன் அதிதிகள் பலரும் கலந்து கொண்டணர்.
இதன்போது பார்வையாளர்கள் மைதானத்திற்கு உள்ளே நுழைந்தமையினால் நிர்வாகிகள் பார்வையாளர்களை கட்டுப்படுத்தமுற்பட்டபோதே நிர்வாகிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
கைகலப்பு ஏற்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்றவர்களுக்கு மாத்திரம் அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.











