குடிவரவு – குடியகல்வு சட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைதுசெய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது என கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சரை உரிய குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக பிரதம நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.

