ஜனாதிபதி நாளை இந்தோனேஷியா பயணம்

236 0
இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் ஆரம்பமாகவுள்ள இந்து சமுத்திரவலய நாடுகளின் அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை கலந்துகொள்ளவுள்ளார்.

இதன் 20 ஆவது ஆண்டு நிகழ்வை முன்னிட்டு நாளை மறுதினம் அரச தலைவர்களுக்கிடையிலான சிறப்பு சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன் நிமித்தம் நாளை ஜனாதிபதி இந்தோனேஷியா செல்லவுள்ளார்.

இதேவேளை, நாளை ஆரம்பமாகின்ற அமைச்சர் மட்ட ஒன்று கூடலில் கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஏனைய நாடுகளின் அமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

இதன்போது, இந்து சமுத்திர வலயத்தில் பொருளாதார நடவடிக்கைகளுக்கான வசதிகளை மேம்படுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை, கடல்பாதுகாப்பு, வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், கடற்தொழிற்துறை முகாமைத்துவம், அனர்த்த முகாமைத்துவம், கல்வி மற்றும் சுற்றுலாதுறை போன்ற விடயங்களிலும் இதன்போது முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளது.