ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான பெரு முன்னாள் ஜனாதிபதி அமெரிக்காவில் சரணடைந்தார்

151 0

சொந்த நாட்டில் ஊழல், பணச்­ச­லவை குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொண்­டுள்ள பெருவின் முன்னாள் ஜனா­தி­பதி அலெ­ஹான்ட்ரோ டொலேடோ, அமெ­ரிக்க அதி­கா­ரி­க­ளிடம் சர­ண­டைந்­துள்ளார். அவர் விரைவில் நாடு கடத்­தப்­ப­ட­வுள்ளார்.

2001 முதல் 2006 ஆம் ஆண்­டு­­வரை பெரு­வின் ஜனா­தி­ப­தி­­யாக பதவி வகித்­தவர் அலெ­ஹான்ட்ரோ டொலேடோ (77). ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த காலத்தில் பிரே­ஸிலின் கட்­டு­மான நிறு­வ­ன­மொன்­றி­ட­மி­ருந்து 20 மில்­லியன் டொலர்­களை லஞ்­ச­மாக அவர் பெற்றார் என டொலேடோ மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அவ­ருக்கு 20 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட வேண்டும் என பெரு அதி­கா­ரிகள் எதிர்­பார்க்­கின்­றனர்.

தன் மீதான குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரித்து வரும் டொலேடோ, பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்­கா­வுக்கு தப்பிச் சென்றார்.

பெரு அரசின் கோரிக்­கையின் பேரில் 2019 ஆம் அண்டு அமெ­ரிக்க அதி­கா­ரி­களால் அவர் கைது செய்­யப்­பட்டார். 2020ஆம் ஆண்டு வீட்­டுக் காவலில் வைக்­கவும், அவரின் நட­­மாட்­டத்தைக் கண்­கா­ணிப்­ப­தற்கு காலில் இலத்­தி­ர­னியல் கண்­கா­ணிப்பு சாதனம் பொருத்­தவும் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

அவரை நாடு கடத்­து­வ­தற்கு எதி­ரான மனுவை அமெ­ரிக்க மேன்­மு­றை­யீட்டு நீதி­­மன்றம் நிரா­க­ரித்­தது. அதை­ய­டுத்து நேற்­று­­முன்­தினம் அமெ­ரிக்க சட்ட அமு­லாக்கல் அதிகாரிகளிடம் அலெஹான்ட்ரோ டொலேடோ சரணடைந்தார். சில தினங்­களுக்குள் அவர் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.