பிறை தென்பட்டது !நோன்புப் பெருநாள் நாளை !

175 0

நோன்புப் பெருநாள் இன்று கொண்டாப்படுவதாக  கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1444 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (21) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம்  சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உலமாக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நாட்டின் பல பிரதேசங்களிலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

எனவே நாளை 22 ஆம் திகதி சனிக்கிழமை நோன்புப்பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.