வவுனியா – வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

183 0

வவுனியா – வடக்கு உள்ளூராட்சி மன்ற வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை வழங்குமாறு வவுனியா வடக்கு பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் புதிய வட்டாரங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணயக் குழுவின் வரைவு அறிக்கை வெளியாகியுள்ளது.

 வவுனியா - வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை (photos) | Vavuniya A Request To The General Public

இது தொடர்பாக மக்களது கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை தேசிய எல்லை நிர்ணய குழு, அளவையாளர் நாயக அலுவலகக் கட்டடம், கிருளவீதி, கொழும்பு – 5 என்னும் முகவரிக்கும் பிரதிகளை மாவட்ட செயலாளர், மாவட்ட செயலகம், வவுனியா மற்றும் செயலாளர், வவுனியா வடக்கு பிரதேச சபை, நெடுங்கேணி ஆகிய முகவரிகளுக்கு எதிர்வரும் 27.04.2023 முன்னர் அனுப்பி வைக்குமாறு வவுனியா வடக்கு பிரதேச சபை செயலாளர் கோரியுள்ளார்.

எல்லை நிர்ணய வட்டார விபரங்களை வவுனியா வடக்கு பிரதேச சபை நெடுங்கேணி அலுவலகத்திலும், கனராயன்குளம் பகுதியில் உள்ள உப அலுவலகத்திலும், நெடுங்கேணி நூலகத்திலும், நைனாமடு உப அலுவலகத்திலும் பார்வையிட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.