முட்டைக்கு விலை நிர்ணயம் !

145 0

இன்று முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

அத்துடன் நிறையின் அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையும் குறித்த வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் சிவப்பு  முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளை நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை  44 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை ஒன்றின் சில்லறை விலை 46 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

நுகர்வோர் விவகார அதிகார சபை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து ஜனவரி 20 ஆம் திகதி அமுலாகும் வகையில் இவ்வாறு அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.