உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கும், பிரதம நீதியரசருக்குமே உண்டு என்றும், கர்தினாலுக்கு அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அபராதம் செலுத்தாவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும், நீதிமன்றத்தை மதித்து அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு செவ்வாய்க்கிழமை (18) சென்ற மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

