ஜெயந்திபுரவில் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மூவர் கைது!

155 0

பொலன்னறுவையின் ஜெயந்திபுர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு  முன்பாக இருவரைத் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் மூன்று சிவில் பாதுகாப்பு படை வீரர்களை திங்கட்கிழமை (17) சந்தேகத்தின் பேரில் சூரியபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜெயந்திபுர மற்றும் பன்சல் கொடல்ல ஆகிய சிவில் பாதுகாப்புப் படையின் துணை முகாம்களில் பணிபுரியும் மூன்று  வீரர்களே  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27, 39 மற்றும் 37 வயதுடையவர்களாவர்.