சூடானி;ல் தொடரும் வன்முறைகளிற்கு மத்தியில் அந்த நாட்டிற்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
சூடான் தலைநகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் அய்டன் ஓஹரா தாக்கப்பட்டுள்ளார்.
எனினும் தூதுவருக்கு கடும் காயங்கள் ஏற்படவில்லை என அயர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் மைக்கல் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
இது இராஜதந்திரிகளை பாதுகாப்பதற்கான கடப்பாடுகளை மோசமாக மீறும் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று நாட்களாக இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக 185 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் 1800 பேர் காயமடைந்துள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.

