அருட்தந்தையின் அரசு ஆட்சி அதிகாரம் நூல் வெளியீடு

151 0

அருட்தந்தை லூக் ஜோன் எழுதிய அரசு ஆட்சி, அதிகாரம் நூல் வெளியீடு, கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

அருட்தந்தை தேவகுணாநந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின்ஆசியுரையை தென்னிந்திய திருச் சபையின் யாழ். பேராயர் கலாநிதி பத்மதயாளனும், நூல் அறிமுக உரையை கலாநிதி ரிஎஸ். யோசுவாவும், நூல் ஆய்வுரையை பேராசிரியர் கேரி. கணேசலிங்கம், அருட்தந்தை எம். யூட்சுதர்சனும் நிகழ்த்தினர்.

நூலின் முதற்பிரதியை பேராசிரியர் ஏசி. தவரஞ்சித் பெற்றுக்கொண்டார்.

தற்போதைய இலங்கை அரசியலையும் இனத்துக்குள் நடக்கும் அடிப்படைவாதங்கள், ஒடுக்குமுறைகள் தொடர்பில் ஒப்பிட்டு ஆய்வு செய்து எழுதப்பட்ட நூலாக அரசு ஆட்சி அதிகாரம் நூல் வெளிவந்துள்ளது.