முட்டை விலை தொடர்பில் விசேட அறிவித்தல்

148 0

50 ரூபாவிற்கும்  குறைவான விலையில் முட்டை வழங்கத்  தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முட்டை சங்கப் பிரதிநிதிகள் கூடி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அதற்கேற்ப இன்றுமுதல் நுகர்வோர் இந்த சலுகையைப் பெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்

எவ்வாறாயினும், முட்டைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச விலை 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.