இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஷ்யர்களை விடுவிக்குமாறு கோரிக்கை

259 0

இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஷ்யர்களை விடுவிக்குமாறு ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய கூட்டமைப்பினால் அதன் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக ரஷ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய குடிவரவு சட்டங்களை மீறிய குற்றத்திற்காக சில ரஷ்யர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கையில் தொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சில ரஷ்யர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் முகப்புத்தக தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரஷ்யர்களின் எண்ணிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.