25 வயதான ஆசிரியை ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை

145 0

பேராதனை, கொப்பேகடுவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்குச்  சென்று கொண்டிருந்த பாலர் பாடசாலை ஆசிரியை ஒருவர் இன்று (07) காலை வெட்டி  கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொப்பேகடுவ – கினிஹேன வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் இலுக்தென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக 119 அவசர தொலைபேசி இலக்கத்துக்கு  தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 25 வயதான முருதலாவ பகுதியைச் சேர்ந்த அஞ்சலி ஷாப்பா என தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும்  இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்த பேராதனை பொலிஸார்     பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறினர்.