ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் சில பிளாஸ்ட்டிக் பொருட்களுக்கு இறக்குமதித்தடை விதிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய குளிர்பானங்களை அருந்துவதற்கு உபயோகிக்கும் சிறுகுழாய்கள், தட்டுக்கள், தண்ணீர்க் கோப்பைகள், கரண்டிகள், முட்கரண்டிகள் மற்றும் கத்திகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

