வெயாங்கொடையில் வீசிய பலத்த காற்றினால் வீடுகளுக்குச் சேதம்!

175 0

வெயாங்கொடை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நேற்று (06) மாலை 5.00 மணியளவில்  வீசிய பலத்த காற்றினால் ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளன.

வெயாங்கொடை  பிரதேசத்தில் வீடொன்றின் மீது பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் வீட்டின் கூரை மற்றும் மின் உபகரணங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

சம்பவத்தின்போது வீட்டினுள் இருந்த பெண் ஒருவர் காயமின்றி உயிர்தப்பியுள்ளார்.