இம்முறை -இந்த ஜனாதிபதியின் கீழ் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி கிடைக்குமா?

173 0

கேள்வி- 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நீங்கள் எவ்வளவு சீற்றமடைந்துள்ளீர்கள்?

பதில்-கோபம் என்பது தற்போது இல்லை அந்த சம்பவம் இடம்பெற்றவேளை நிறைய சீற்றம் அதிர்ச்சி பேரிழப்பு போன்ற உணர்வுகள் காணப்பட்டன ஆனால் அவை தணிந்துவிட்டன.

இது என்னுடைய ,லசந்தவின் குணம் எங்களிற்கு என்ன நடந்தாலும் நாங்கள் கவலைப்பட்டதில்லை – தாக்கப்பட்டபோதும் வன்முறைக்கு இலக்கான போதும்.நீங்கள் கோபத்தை தூக்கிபிடிக்காமல் முன்னோக்கி நகரவேண்டும் .

அவர் இங்கில்லை என்பது தற்போதும் எங்களிற்கு பெருந்துயர்தான்,ஆனால் அது தற்போது ஆத்திரத்தை ஏற்படுத்துவதாகயில்லை.

கேள்வி- நீங்கள் எந்த தருணத்திலாவது தாக்குதலிற்கு இலக்கானீர்களா?

பதில்-நானும் அந்த அனுபவத்தின் ஒரு பகுதியாக காணப்பட்டேன் 1995 இல் சண்டே லீடர் வெளியாகி ஒரு வருடத்தின் பின்னர் ஒரு நாள் நாங்கள் வேலையிலிருந்து தாமதமாக இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தோம்

முகக்கவசம் அணிந்த நான்கு காடையர்கள் லசந்தவை காரிலிருந்து இறக்கி தாக்கினார்கள் கார்சாரதி பக்கத்திலிருந்து நான் கீழே குதித்து லசந்தவை காப்பாற்ற முயன்றேன்.

அவர்கள் லசந்தவின் தலையில் அடிக்கப்போகின்றார்கள் என நினைத்த நான் அவரின் மேல் விழுந்து அவரை மறைத்தேன் அதன் பின்னர் அவர்கள் என்னை அடித்தார்கள்.

அந்தவேளை எனக்கு 100 அடிகள் விழுந்தாலும் அசையப்போவதில்லை அங்கிருந்து செல்லப்போவதில்லை என நான் தீர்மானித்தேன் – உங்களிற்கு ஒரு துணிச்சல் வரும் இல்லையா அப்படி.

எனக்கு ஒருமுறை அடித்த பின்னர் அவர்கள் லசந்தவின் வலெட்டை எடுத்துக்கொண்டு ஹயஸ் வானில் ஓடியது எனநினைவில் உள்ளது.

3

சிலவருடங்களின் பின்னர் அந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டவேளை – (இருவர்) அவர்களை லசந்த மன்னித்தார் என்பது உண்மையா?

பதில்-

தாக்குதலிற்கான உத்தரவை வழங்கியவர் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை

ஆனால் அந்த தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் லீடர் அலுவலகத்திற்கு சென்று தான் அவ்வேளை பொலிஸில் இருக்கவில்லை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியதாக தெரிவித்தார்.

ஜோன் அமரதுங்க லசந்த மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்த பின்னர் இது இடம்பெற்றது.

அவர் தான் நடந்த சம்பவம் குறித்து கவலையடைவதாகவும்  பொலிஸ் உள்ளக விசாரணைகள் இடம்பெற்றால் தனது தொழில் பறிபோகலாம் எனவும் தனக்கு பிள்ளைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த நபர் தனக்குபிள்ளைகள் உள்ளதாக தெரிவித்ததும் வழமை போல லசந்தவின் மனதில் இரக்கம் ஏற்பட்டது லசந்த நான் இது குறித்து பொலிஸ்மா அதிபருக்கு எழுதுகின்றேன் என்றார்.

பின்பு அவர் லாலை சந்தித்து லால் இவர்கள் குற்றவாளிகள் இல்லை இவர்கள் கருவிகளே இவர்கள் உத்தரவைதான் முன்னெடுத்தார்கள்  என குறிப்பிட்டார்.

லால் அதனை ஏற்க மறுத்தபோதிலும் லசந்த பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதினார்.

அதனை தான் நான் தெரிவித்தேன் லசந்த தனிப்பட்ட பகையை காவித்திரிபவர் இல்லை.

 

பலாலி விமானம் நிலையம் தாக்கப்பட்டமை குறித்தசெய்தியை அவர் எவ்வாறு தணிக்கைகளை மீறி வெளியிட்டார்?

பதில்-

அவர் எப்படியாவது இந்த தணிக்கையை தாண்டி செல்லவேண்டும் என நினைத்தார்.

பலாலியில் பெரும் சம்பவமொன்று இடம்பெற்றது ஆனால் இறுக்கமான  செய்தி தணிக்கை காரணமாக எவருக்கும் உண்மை தெரியாத நிலை காணப்பட்டது.

ஏற்கனவே லசந்தவிற்கு எச்சரிக்கையொன்று கிடைத்திருந்தது.

அவர் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க விரும்பினார் ஏனென்றால் பல வதந்திகள் பரவிக்கொண்டிருந்தன.

1983 இல் வதந்திகள் காரணமாக என்ன நடந்தது என்பது அவருக்கு தெரிந்திருந்தது உங்களிற்கும் தெரிந்திருக்கும் .பெரும் பேரழிவு ஏற்பட்டது.

நாங்கள் பெரும் பேரழிவை சந்தித்திருந்தோம்.

ஆகவே அவர் நாங்கள் இந்த செய்தியை மக்களிற்கு தெரிவிக்கவேண்டும் என உறுதியாக காணப்பட்டார் ஆனால் செய்தி தணிக்கையை மீறி எப்படி உண்மையை சொல்வது என சிந்தித்தார்.

அவ்வேளையே அவருக்கு இந்த அற்புதமான திட்டம் தோன்றியது

அவர் வேகமாக செய்தி அறைக்குள் வந்தார், அங்கு செய்தியை கணிணியில் தட்டச்சு செய்துகொண்டிருந்த பெண்ணிடம் வந்தார்.

பின்னர் டைப் செய்யுங்கள் என்றார்  நாங்களும் டைப்செய்தோம்,ஒவ்வொரு வசனத்திற்கும் முன்னால் இல்லை என்ற சொல் காணப்பட்டது.

நான் அவரிடம் இதிலிருந்து எப்பிடி தப்பபோகின்றீர்கள் என கேட்டேன் .

அவர் மிகவும் அவதானமாகயிருந்தார் அவர் அதனை முதல் பதிப்பில் வெளியிடவில்லை இறுதி பதிப்பிலேயே வெளியிட்டார்.

அது அப்படியே வெளியானது

திங்கட்கிழமை காலை அவர்கள் அச்சகத்திற்குள் நுழைந்து அதனை மூடினார்கள்.

கேள்வி- அவர் செய்தி தணிக்கையை தோற்கடித்தார்?

ஆம் செய்தி தணிக்கையை தோற்கடித்தார்

கேள்வி -எவ்வளவு மாதங்கள் அச்சகம் மூடப்பட்டிருந்தது?

ஒன்றரை மாதங்கள் என நான் நினைக்கின்றேன் நாங்கள் நீதிமன்றம் சென்றோம் சட்டத்தின் துணையுடன் மீண்டும் செயற்படதொடங்கினோம் – செய்தி தணிக்கை சட்டபூர்வமானது இல்லை என்பது எங்களின் வாதம்.

 

கேள்வி- நல்லாட்சி அரசாங்கத்தில் லசந்த விக்கிரமதுங்க கொலை குறித்து குறிப்பிடத்தக்க விதத்தில் எந்த செயற்பாடும் இடம்பெறவில்லை இது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

 

பதில்- லசந்த ஐக்கியதேசிய கட்சியின் உயர்மட்டத்தினருடன் மிகவும் நெருக்கமாக காணப்பட்டார்,ரணில் அவர்களுடனும்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம் , அகிம்சா மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.இறுதியாக எங்களிற்கு விடைகள் கிடைக்கப்போகின்றன என நாங்கள் கருதியதே இதற்கு காரணம் லசந்தவுக்கு மாத்திரமல்ல அதற்கு முன்னர் கொல்லப்பட்டவர்களிற்கும் விடைகள் கிடைக்கப்போகின்றன என நாங்கள் கருதினோம்.

கேள்வி- 

நல்ல நபர்கள் வெற்றிபெற்ற பின்னர் என்ன நடந்தது?

பதில்- 2015 இன் இறுதியில் லசந்தபடுகொலை குறித்த விசாரணைகள் நிசாந்த சில்வாவிடம் அவரின் குழுவினரிடமும் கையளிக்கப்பட்டன,சிசிர திசேர அதில் ஒரு பகுதியாக காணப்பட்டார்.

அவர்கள் விசாரணைகளில் பல முன்னேற்றங்களை கண்டனர்,இறுதியாக இது இடம்பெறுகின்றதே என நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம்.அவர்கள் நாடுமுழுவதும் சென்றார்கள் மக்களை சந்தித்தார்கள் ஆதாரங்களை திரட்டினார்கள் மரபணுபரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்தார்கள் அது மிகவும் களைப்பு தரக்கூடிய செயற்பாடு.

ஆனால் அவ்வேளை அரசியல் காற்று மெல்ல மெல்ல மாறத்தொடங்கியது.உயர் பதவியிலிருந்தவர்கள் மத்தியில் மோதல்கள் இடம்பெற்றன.

அதன்பின்னர் காற்று மீண்டும் ராஜபக்சாக்கள் பக்கம் திடீரென வீசுவதை நாங்கள் உணர்ந்தோம்.

2018 நெருங்கும் போது எதுவும் இடம்பெறவில்லை என்பதும் அவர்கள் விசாரணைகளை சிதைக்கின்றார்கள் என்பதும் வெளிப்படையாக தெரிந்தது.நாங்கள் அவ்வாறு நினைத்தோம்.

திட்டமிட்டு விசாரணைகள் சிதைக்கப்படுகின்றன என்ற தகவல்கள்  எங்களிற்கு கிடைத்தன.

2019 இல் திடீரென நிசாந்த சில்வா அகற்றப்பட்டார்.அவர் இடமாற்றம் செய்யபப்பட்டார் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.அகிம்சா அது குறித்து ஒரு கடிதமொன்றை மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதினார்.அது அவருக்கு மிகப்பெரிய அவமானம்.ஆகவே அவர்கள் அந்த இடமாற்ற உத்தரவை இரத்துச்செய்தனர் நிசாந்த மீண்டும் பணிக்குதிரும்பினார்.ஆனால் எதுவும் இடம்பெறப்போவதில்லை என்பது எங்களிற்கு தெரிந்திருந்தது.

கேள்வி – ஜனாதிபதியாக கோட்டாபய தெரிவு செய்யப்பட்ட அன்றிரவு நாட்டிலிருந்து வெளியேறிய நிசாந்த சில்வா வெளிநாட்டில் வசிக்கின்றார்,ஹேக்கில் நிரந்தரதீர்ப்பாயத்தின் முன்னிலையில்  கருத்து தெரிவிக்கையில்  அவர் லசந்த கொலை குறித்து பல ஆதாரங்களை வெளியிட்டார் அது பற்றி தெரிவிக்க முடியுமா?

பதில்- ஆம் சாட்சியமளித்த நிசாந்த சில்வா எங்களை கீத்நொயர் கடத்தல் சித்திரவதை சம்பவத்திற்கு கொண்டு சென்றார்.

தொலைபேசி பதிவுகளும் ஏனைய ஆவணங்களும் இது இராணுவபுலனாய்வு பணியகத்தின் கீழ் இயங்கிய திரிபோலி பிளட்டுனின் செயற்பாடு என்பதை வெளிப்படுத்தின என அவர் தீர்ப்பாயத்தின் தெரிவித்தார்.

கீத் நொயர் கடத்தப்பட்டதும் அவரது ஆசிரியர் லலித் அழககோன் பொலிஸ் விவகாரங்களிற்கு பொறுப்பாகயிருந்த அமைச்சரை( கருஜெயசூர்ய) தொடர்புகொண்டுள்ளார்.

நிசாந்த சில்வா சேகரித்த தொலைபேசி உரையாடல் ஆதாரங்கள் மூலம் பல விடயங்கள் வெளியாகியுள்ளன.

லலித் அழககோன் கருஜெயசூர்யவை தொடர்புகொண்டுள்ளார், கருஜெயசூர்ய மகிந்தவை தொடர்புகொண்டுள்ளார் மகிந்த கோட்டாபயவை தொடர்புகொண்டுள்ளார்,கோட்டாபய வேறு சிலரை தொடர்புகொண்டுள்ளார் இறுதியாக அவர்கள் கீத்நொயரின் கையடக்க தொலைபேசியிலிருந்தும் அவரை தொம்பேயில் சித்திரவதை செய்யும் நபரிடமிருந்தும் தொலைபேசி  சமிக்ஞையை பெற்றுள்ளனர்.

கேள்வி – ஹேக்கில் நிசாந்த வழங்கிய சாட்சியங்களை அடிப்படையாக வைத்து உங்களால் ஏனைய விடயங்களை கண்டுபிடிக்க முடிந்தததா?

பதில்-

ஆம் நிசந்த எங்களிற்கு என்ன தெரிவித்தார் என்றால் கீத்நொயர் விவகாரத்தில் கிடைத்த ஆதாரங்களை வைத்து அவற்றை லசந்தவின் கொலையுடன் தொடர்புபடுத்த முடிந்ததாக அவர் தெரிவித்தார். கைவிரல் அடையாளங்களும்.

அதேநபர்களே லசந்தவின்  கொலையில் தொடர்புபட்டிருந்தார்கள் என்பதை அவர் கண்டுபிடித்தார்.

கேள்வி – உங்கள் கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் உங்களிற்கு தெரிவிக்கப்பட்ட அந்த தருணம் உங்களிற்கு நினைவில் உள்ளதா?

பதில்- ஆம் அது மிகவும் வேதனையான கடினமான ஒரு நாள்

கேள்வி – அந்த நாளை பற்றி தெரிவிக்க முடியுமா?

பதில் – மிகவும் கடினம். அந்த நாளிற்கு மீண்டும் திரும்புவது மிகவும் கடினம்.

கேள்வி

நீங்கள் அவுஸ்திரேலியாவில இருந்தீங்களா?

ஆம் அவுஸ்திரேலியாவில் இருந்தேன்.

கேள்வி

நீதி ஒரு நாள் சாத்தியமாகும் என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில் – ஆம் நான் ஒருநாள் நீதி நிலைநாட்டப்படும் என நினைக்கின்றேன்

 

கேள்வி – ஏன் லசந்த விக்கிரமதுங்க அவ்வேளை இலக்குவைக்கப்பட்டார் என நீங்கள் கருதுகின்றீர்களா?

ஏதாவது செய்தி காரணமா?

 

பதில்- அவர் பல செய்திகள் குறித்து ஆராய்ந்துகொண்டிருந்தார் எழுதிக்கொண்டிருந்தார் அவர் தாக்கப்படப்போகின்றார் கொல்லப்படப்போகின்றார் என நாங்கள் நினைத்தோம்.

ஆனால் கடைசி சில மாதங்களாக அவர் மிக் விவகாரம் குறித்து செய்திகளை எழுதினார் பல விடயங்களை அம்பலப்படுத்தினார்.

ஆகவே அவரது கொலைக்கு மிக் விமான விவகாரம் குறித்த செய்திகளே காரணம் என யாரும் கருதுவார்கள்.

 

கேள்வி- ஜனாதிபதியை சந்தித்திருக்கின்றீர்களா?

பதில் – இம்முறையா?

கேள்வி – ஆம் இம்முறை

பதில் – இல்லை

கேள்வி- இந்த முறை இந்த ஜனாதிபதி லசந்தவின் படுகொலை தொடர்பில் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?

பதில்- நிச்சயமாக இல்லை, 2015 முதல் 2019 வரை செய்யாதவர் ஏன் தற்போது  செய்யப்போகின்றார் நிச்சயமாக நம்பிக்கையில்லை.

Newsfirst  Sri Lanka