ஜேர்மன் கிராமம் ஒன்றின் மக்கள், அகதி ஒருவரை மேயராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அகதி ஒருவரை மேயராக தேர்வு செய்த ஜேர்மன் கிராமம்
தெற்கு ஜேர்மனியிலுள்ள Ostelsheim என்னும் கிராமத்தில் வாழும் மக்கள், Ryyan Alshebl (29) என்னும் சிரிய அகதியை மேயராகத் தேர்வு செய்துள்ளனர்.
தெற்கு சிரியாவிலுள்ள Sweida என்னும் இடத்திலிருந்து 2015ஆம் ஆண்டு உயிர் பிழைக்க ஓடிவந்த Ryyan, தற்போது 2.500 பேர் வாழும் கிராமம் ஒன்றின் மேயராகியுள்ளார்.
Baden-Württemberg மாகாணத்தில், மேயர் பதவிக்கு வந்துள்ள சிரியப் பின்னணி கொண்ட முதல் நபர் Ryyanஆகத்தான் இருக்கமுடியும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

