இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி

355 0

கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 697 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 517 சுற்றுலா பயணிகளே இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையானது 0.1 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.