இங்கிலாந்து அணி வெற்றி

250 0

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் இந்தப் போட்டி நேற்று இடம்பெற்றது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட்டக்களை இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 297 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 47.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 45 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதேவேளை, இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களுரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.