அமெரிக்காவின் சட்டமா அதிபருக்கு டொனால்ட் டிரம்ப் ஆதரவு

233 0

ரஷ்ய தூதுவருடனான சந்திப்பின் காரணமாக அமெரிக்காவின் சட்டமா அதிபர் ஜெப் செசன்ஸ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தும் நிலையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சட்டமா அதிபராக பதவி வகிக்கும், ஜெப் செசன்ஸ். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது ரஷ்ய தூதுவர் செர்கெய் கிஸ்ல்யாக்கை இரு முறை சந்தித்து உரையாடியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி தெரிவித்துள்ளது.

எனினும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சட்டமா அதிபருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.