சுவாச தொற்று – பரிசுத்த பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதி

146 0

சுவாச தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள  பரிசுத்தபாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரோம் வைத்தியசாலையில் பரிசுத்த பாப்பரசர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாட்களிற்கு வைத்தியசாலையில் தங்கியிருக்கவேண்டியிருக்கும் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.

86 வயது பரிசுத்த பாப்பரசர் கடந்த சில வாரங்களாக சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார் ஆனால் கொவிட் பாதிப்பில்லை என வத்திக்கான் தெரிவித்துள்ளது.

அவருக்கு சில நாட்கள் பொருத்தமான வைத்தியசாலை சிகிச்சை தேவைப்படுகின்றது என வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது.

பரிசுத்த பாப்பரசர் விரைவில் குணமடையவேண்டும் என பிரார்த்தித்து பலர் செய்திகளை அனுப்பியுள்ளனர் அவர்களிற்கு அவர் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.