மொனராகலையில் 14 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் தப்பியோட்டம்; இருவர் கைது

157 0

மொனராகலை, ஒக்கம்பிட்டிய பகுதியில் 14 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் தப்பிச்சென்றுள்ளதுடன்  இருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக ஒக்கம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியின் யால வனப்பகுதியின் கையிலகும்புர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 12 கிலோ 710 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 14 கிலோ 5 கிராம் நிறையுடைய கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 26 வயதுடைய எம்பிலிப்பிட்டிய மற்றும் மொனராகலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒக்கம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.