‘குற்றப் பின்னணி இல்லாதவர்’ – அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆட்ரி ஹேலியின் பின்புலத் தகவல்கள்

74 0

 அமெரிக்காவின் நாஷ்வில் பகுதியில் திங்கள்கிழமை பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 குழந்தைகள் மற்றும் மூன்று பள்ளி ஊழியர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்தப் படுகொலைகளை நிகழ்த்திய டென்னிஸியை சேர்ந்த ஆட்ரே ஹேலி குறித்த தகவல்களை நாஷ்வில் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

* ஆட்ரே ஹேலி, திருநம்பி என்று அறியப்படுகிறார். தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அவர் தன்னை ஆண் என்றே குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இவர் க்ராபிக் டிசைனிங் சார்ந்த துறையில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.

* ஹேலி பள்ளியின் தாக்குதல் நடத்த முன்னரே நன்கு திட்டமிட்டிருக்கிறார். பள்ளியின் எந்த நுழைவாயில் வழியாக நுழைவது, போலீஸார் வந்தால் எவ்வாறு சமாளிப்பது போன்ற அனைத்தையும் முன்னரே திட்டமிட்டுருக்கிறார். தான் திட்டமிட்டபடி பள்ளியின் சர்ச் நுழைவாயிலில் வழியாக சென்றுதான் அவர் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறார்.

* இவர் வீடியோ கேம் விளையாடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவராக அறியப்படுகிறார். இதற்கு முன்னர் ஹேலி மீது எந்த குற்றவியல் வழக்குகளும் இல்லை.

* ஹேலி இரண்டு ஏ.ஆர். துப்பாக்கிகளையும், ஒரு கைத்துப்பாக்கியையும் வைத்திருக்கிறார். இந்த ஆயுதங்களை அவர் சட்டத்திற்கு உட்பட்டே வாங்கி இருக்கிறார்.

* நாஷ்வில் பள்ளியின் முன்னாள் மாணவர்தான் ஹேலி. எனவே, பள்ளிக்கும் அவருக்கு முன்னர் மனக்கசப்பு ஏற்படும்படியான நிகழ்வு நடந்திருக்கலாம். இதன் விளைவாக இந்த துப்பாக்கிச்சூட்டை அவர் நடத்தி இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகின்றனர்.

* பள்ளி தவிர்த்து பிற இடங்களில் ஹேலி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில்தான் அவர் நாஷ்வில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

* ஹேலியின் தாயார் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டத்திற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.