பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

184 0

ங்காலை, நெடோல்பிட்டிய வெலியார பிரதேசத்தில் இன்று (27) காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்த விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக  தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலியார நெடோல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த திபாஷிகா லக்ருவானி விஜேதாச என்ற 28 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நெடோல்பிட்டிய விவசாய சேவை நிலையத்துக்கு பணி நிமித்தம் சென்றுகொண்டிருந்தபோது, நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெண்ணின் சடலம் தங்காலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.