வவுனியாவில் 14 வயது மாணவி பாலியல் துஸ்பிரயோகம்

262 0

வவுனியாவில் 14 வயது மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் இன்று (23) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுமி கற்றல் செயற்பாட்டுக்காக வெளியில் வந்து வீடு நோக்கி சென்ற போது இளைஞர் ஒருவர் குறித்த 14 வயது சிறுமியை வழிமறித்து அவரை கடத்திச்  சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

தனக்கு நடந்த விடயத்தை சிறுமி வீட்டாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து நெளுக்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞரை தேடி வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.