குடிவரவு சட்டங்களை மீறி கடவுச்சீட்டை தயாரித்ததாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக நபராக குறிப்பிடுவதா இல்லையா என்பது இது தொடர்பான உத்தரவை எதிர்வரும் 6ஆம் திகதி வழங்க கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (23) தீர்மானித்தார்.
இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்னர், அவரது குடியுரிமை தொடர்பான விவகாரத்தை குடிவரவு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

