ஜெனீவா மாநாட்டில் இலங்கை சார்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு அரசாங்கமும் இணை அனுசரனை.

261 0

ஜெனீவாவில் இடம்பெறும் 34வது மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை சார்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கவுள்ளது.

மறுசீரமைப்பு பொறிமுறை செயலகத்தின் பொதுசெயலாளர் மானோ தித்தவெல ஜெனீவாவில் வைத்து இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் வகையிலான பிரேரணை ஒன்று இந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து இதனை முன்வைக்கவுள்ளன.

இதற்கு இலங்கையும் அனுசரனை வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதன் ஊடாக இலங்கைக்கு 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனீவா பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்க மேலும் 2 ஆண்டுகால அவகாசம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.