ஆப்கானில் வேலை இழந்த 53 சதவீத பத்திரிகையாளர்கள்

20 0

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பிறகு 53 சதவீத பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளதாக அந்நாட்டின் பத்திரிகையாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் 50 சதவீத செய்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக 200 வழக்குகள் பதிவானதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.