பாடசாலை விளையாட்டு அதிகாரிகள் வௌிநாட்டு சுற்றுப்பயணங்களில் கலந்து கொண்ட விதம் மற்றும் பாடசாலை விளையாட்டு வீரர்கள் சுற்றுப்பயணங்களில் கலந்து கொண்ட விதம் தொடர்பில் சிறப்பு விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அது தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
வௌிநாட்டு சுற்றுப்போட்டிகளுக்காக பாடசாலை விளையாட்டு வீரர்களை அழைத்துச் சென்ற போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடுகள் மற்றும் தகவல்கள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

