காணாமல் ஆக்கப்பட்டோர் நிரந்தர அலுவலகம்

359 0

காணாமல் ஆக்கப்பட்டோர் நிரந்தர அலுவலகம் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் ஊருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரையில் பாதிக்கப்பட்டவர்களும், செயற்பாட்டாளர்களும் பொறுமைகாக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மறுசீரமைப்பு பொறிமுறை இணைப்பு செயலகத்தின் பொதுசெயலாளர் மனோ தித்தவெல இதனைத் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்காக அரசாங்கம் ஏலவே 1.4 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

இந்த அலுவலகம் அமைச்சு ஒன்றுக்கு பாரப்படுத்தப்பட்டதன் பின்னர் அது இயங்க ஆரம்பிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.