இன்று நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விச் செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை ஒரு சில பாடசாலைகளில் மாத்திரம் ஒரு சில மாணவர்கள் சமூகமளித்த போதும் கல்விச் செயற்பாடுக்ள இடம்பெறவில்லை, அத்தோடு வைத்தியசாலைகளில் அவசர நோயாளர் சேவைகள் மாத்திரம் இடம்பெற்றன. ஏனைய சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. தனியார் போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.
அரச திணைக்களங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற உத்தியோகத்தர்கள் பெருமளவுக்கு சமூகமளிக்கவில்லை, பொது மக்களும் அலுவலகங்களுக்கு செல்வது மிக மிக குறைவாக காணப்பட்டன.

