அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் இன்றைய பெறுமதி!

159 0

இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை நேற்றைய தினத்தை விட அதிகரித்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327.59 ரூபாவாகவும் விற்பனை விலை 344.66 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

அதன்படி, இன்று (15) முற்பகல் இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் சிலவற்றில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தன.

இலங்கை வங்கி – ரூ. 326.00 – ரூ. 344.00

சம்பத் வங்கி – ரூ. 330.00 – ரூ. 345.00

வணிக வங்கி – ரூ. 330.00 – ரூ. 345.00

HNB – ரூ. 327.00 – ரூ. 342.00

NDB – ரூ. 327.00 – ரூ. 345.00

அமானா வங்கி – ரூ. 329.50 – ரூ. 344.50