ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 8ஆம் திகதி, இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளாரென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது, இந்தோனேஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய கைத்தொழில் மற்றும் கடற்றொழில் / சமுத்திரவியல் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

