அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு – விசாரணை

481 0
அமெரிக்காவில் 2016ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, அமெரிக்க காங்கிரஸ் குழு இணங்கியுள்ளது.
இதற்காக விசேட புலனாய்வு குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா இணையவழி தாக்குதலை நடத்தியதாக அமெரிக்காவின் புலனாய்வ அமைப்புகள் தெரிவித்திருந்தன.
பின்னர் இதனை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் உறுதிப்படுத்தி இருந்தார்.
எனினும் இதனை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே விசாரணைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
அதன்அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.