பட்டதாரிகளை அரச சேவையில் ஆசிரியர்களாக பணியமர்த்துவதற்கான பரீட்சையை நடாத்த பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 341 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என கல்வி அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகளை அனுப்பவதற்கான ஏற்பாடுகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
இத்தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், தேசிய மற்றும் மாகாண பள்ளிகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப தேவையான பட்டதாரிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். அந்த வெற்றிடங்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறும்.
அதன் பின் ஏற்படும் வெற்றிடங்களுக்கு மாகாண அடிப்படையில் மாகாண சபை பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும்.

