கண்டி மாவட்டத்தின் ஹூன்னஸ்கிரிய – எயார்பார்க் தோட்டத்தின் காணிகளை தனியார் துறையினருக்கு விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.குறித்த பகுதியைச் சேர்ந்த பெருந்தோட்ட மக்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகளும், தொழிற்சங்கத்தவர்களும் பொது முயற்சியான்மை அமைச்சின் செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 வருடங்களாக தாங்கள் வசித்து, வளப்படுத்திய பகுதிகளை இரகசியமான முறையில் தனியார் துறையினருக்கு வழங்கும் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தே அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

