நீதிமன்றத்தில் துப்பாக்கிகள் – 20 பேர் கைது

433 0

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிகளை கொண்டு வந்துள்ளவர் ரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர் என காவற்துறை இனங்கண்டுள்ளது.

இதேவேளை, பாதாள குழு ஒன்றின் தலைவரான தெமுனி, ஹெரால்ட் ரோஹன என்ற கொனாகோவிலே ரோஹா என்பவரை கொலை செய்வதற்காக இந்த ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.