சர்வதேசத்தின் எந்த உள்ளீடுகளும் இன்றியே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் உருவாக்கப்படும் என்று, அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளது.இதன்நிமித்தம் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்துக்காக பிரதமர் முன்வைத்த திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான சட்ட மூலத்தின் 11 சரத்தில் உள்ள ‘அ’ பந்தி அழிக்கப்பட்டுள்ளது.
இந்த பந்தியின் ஊடக, குறித்த அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் செயற்படுகின்ற தனியார் அல்லது ஒழுங்கமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இடமளிக்கப்பட்டிருந்தது.

