பிரித்தானியாவால் தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட 82 புரட்சியாளர்கள் தேசிய வீரர்களாக பிரகடனம்

426 0

1818 ஆம் ஆண்டு பிரித்தானியாவால் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட 82 புரட்சியாளர்களை தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கையொப்பம் இட்டுள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் இதற்கான நிகழ்வு இன்று இடம்பெற்றது.

1818 ஆம் ஆண்டில் ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர புரட்சியில் பங்கேற்றதால், 82 புரட்சியாளர்களும் பிரித்தானியாவால் தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், 199 ஆண்டுகளின் பின்னர் அவர்கள் இன்று தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர்.