கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ம் திகதி தொடக்கம் வௌியிடப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் தொடக்கம் 17ம் திகதி வரை நாடு பூராகவும் பணியகத்தின் உள்ளூர் அலுவலக மாவட்ட பயிற்சி நிலையங்களில் விண்ணப்பபடிவங்கள் வௌியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு தோற்றுவதற்கான தகுதிகள் …
- 18 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவராக இருந்தல் வேண்டும்.
- சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டவராக இருத்தல் கூடாது.
- கொரியா சென்று அந்த அரசினால் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டவராக இருத்தல் கூடாது.

