யாழ்.பல்கலைக்கழத்தின் கற்றல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் -துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம்-

379 0

vc1_0யாழ்.பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் மிக விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை ஊகடவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- யாழ்.பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்கழுக்கு இடையே மோதல் சம்பவம் இடம்பெற்றது. இருப்பினும் ஒரு மணித்தியாலங்களுக்குள் அங்கு ஏற்பட்டிருந்த மோதல் நிலமை தவிர்க்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது.
மாணவர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டே பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை மறுதினம் புதன்கிழமை முதல் படிப்படியாக கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விஞ்ஞான பீடம், சித்த மருத்துவ அலகு மாணவர்களுக்கான பயிற்சிகள் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும் விஞ்ஞான பீடம், விவசாய பீடம் ஆகிய மாணவர்களுக்கான பரீட்சைகளும் இத்தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
படிப்படியாக அனைத்து பீடங்களுக்குமான கற்றல் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்படும் என்றார்.