அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிதி அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

203 0

தேர்தலுக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தை விடுவிக்குமாறு தெரிவித்து பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று அனுமதிக்கப்படவேண்டும்.

அத்துடன் பாராளுமன்ற அதிகாரத்தை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிதி அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான பணத்தை பாராளுமன்றத்தினால் விடுவிப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேர்தலுக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தை விடுவிக்குமாறு தெரிவித்து பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று அனுமதிக்கப்படவேண்டும்.

நிதி அமைச்சர் தொடர்ந்து பாராளுமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிட்டு, அந்த பணத்தை விடுவிப்பதை தாமதித்து வருவதால் இந்த பிரேரணையை பாராளுமன்றம் அனுமதிக்கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தில் இருக்கும் அதிகாமனவர்கள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்து வருவதால் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை விடுவிக்க வேண்டும் என்ற பிரேரணையை பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொள்வது கஷ்டமான விடயமாக இருக்காது. என நம்புகிறோம்.

நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் நிதி அதிகாரம் இருப்பது பாராளுமன்றத்திற்காகும். அதனால் வரவு செலவு திட்ட அறிக்கையின் பிரகாரம்  2023ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10பில்லியன் ரூபாவை தேர்தலுக்காக விடுவிக்குமாறு தெரிவித்து  பிரேரணை ஒன்றை அனுமதித்துக்கொள்ளுமாறு பாராளுமன்றத்தை பிரநிதி நிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.

அதேநேரம் பாராளுமன்ற அதிகாரத்தை ஆக்கிரமிக்க வேண்டாம்  என அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிதி அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.