உள்ளுராட்சி தேர்தல்களை பிற்போடச் செய்யும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள், பழைய முறையின்படி தேர்தலை நடத்த வலியுறுத்தி வருகிறது.
இது தேர்தலை பிற்போடச் செய்யும் முயற்சியாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது
ஆனால் இதில் உண்மையில்லை.
தங்களுக்கு நாளையே தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் நடத்தப்பட வேண்டியது மாத்திரம் ஜனநாயக பாதுகாப்பு அல்ல.
குறித்த தேர்தல் உரிய முறையின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்.
அதுவே ஜனநாயக பாதுகாப்பாகும்.
புதிய தேர்தல் முறையில் தங்களுக்கு சிக்கல்கள் இருக்கின்றன.
எனவே பழைய முறையிலேயே உடனடியாக உள்ளுராட்சி தேர்தல்களை நடத்தி, பின்னர் ஆறுதலாக புதிய தேர்தல் முறையை உருவாக்க முடியும் என்றே தாங்கள் கோருவதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

