சட்டத்தின் முறைமைகளை கடைபிடித்தும் மக்களின் உரிமைகளை பாதுகாத்தும், தமது செயற்பாடுகளை மேற்கொண்டதாக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார்.
தமது பதவியின் இறுதி உத்தியோகபூர்வ உரையை இன்று நிகழ்த்தியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கே.ஸ்ரீபவன் இன்று ஓய்வு பெறும் நிலையில் அதுதொடர்பான நிகழ்வு உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உயர்நீதிமன்ற, மேன்முறையீட்டு, மேல்நிதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிபதிகளும் கலந்து கொண்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தமது சேவை காலத்தில், வழக்கு தாமத்தை போக்க மேற்கொள்ள வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் கையாண்டதாகவும் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் குறிப்பிட்டுள்ளார்.

